சிவகார்த்திகேயனும் நானும் ஒன்னுதான்.. அமரன் விழாவில் இப்படி பாராட்டிட்டாரே கமல்!...

by சிவா |
சிவகார்த்திகேயனும் நானும் ஒன்னுதான்.. அமரன் விழாவில் இப்படி பாராட்டிட்டாரே கமல்!...
X

Sivakarthikeyan: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் அமரன். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாதிகளின் தாக்குதலில் மரணமடைந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருந்தார்கள்.

முகுந்த் வரதராஜன்: இந்த படத்தில் முகுந்த் வரதராஜனின் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், அவரின் மனைவி இந்து ரெபாகா வர்கீஸ் வேடத்தில் சாய் பல்லவியும் நடித்திருந்தனர். வழக்கமாக காமெடி கலந்த காதல் கதைகளில் ஜாலியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து சீரியஸாக நடித்திருந்தார்.

உண்மைக்கதை என்றாலும் சினிமாவுக்கு ஏற்றார் போல திரைக்கதையை சிறப்பாக அமைந்திருந்தார் இப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமலின் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் வெளியாகி 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அமரன் பட வசூல்: சிவகார்த்திகேயனின் எந்த படமும் இவ்வளவு வசூலை இதுவரை பெற்றது இல்லை. எனவே, அவரின் சம்பளமும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வாரும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படம் என பெரிய இயக்குனர்களுடன் கை கோர்க்கவுள்ளார்.

அமரன் 100வது நாள் விழா: இந்நிலையில், அமரன் படத்தின் 100வது நாள் விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில், கமல், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய கமல் ‘என்றைக்கு சிவகார்த்திகேயன் தனது முதலீட்டை சினிமாவில் போட்டாரோ அன்றே அவர் என்னுடைய அலைவரிசையில் உள்ள ஆள் என தெரிந்துகொண்டேன்’ என பேசினார்.

இது சிவகார்த்திகேயனுக்கு சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருந்தது. அதேமேடையில் பேசிய சிவகார்த்திகேயன் ‘படம் துவங்குதற்குக் 6 மாதம் முன்பே எனக்கு கமல் சார் முழு சம்பளத்தையும் கொடுத்துவிட்டார். எனது ஒவ்வொரு பட ரிலீஸின் போது பலரும் பிரச்சனை செய்வார்கள். ஆனால், இந்த படத்தில் அது நடக்கவில்லை’ என பேசினார்.

Next Story