விக்ரம் படத்தில் கமலுக்கு என்ன வேடம் தெரியுமா?… அப்போ இதுதான் கதையா?….

Published on: July 30, 2021
---Advertisement---

aa3f4b4001f4347e8ebb2b4036f523b4-2-2

மாஸ்டருக்கு பின் லோகேஷ் கனகரஜ் இயக்கும் திரைப்படம் விக்ரம். இப்படத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மாநாடு, கைதி, மாஸ்டர் என அதிரடி திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜும், கலைஞானி கமலும் இணையவுள்ளதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

74d91aeb36c9255a317d53323e34e90e

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் டெரர் லுக்கில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகியோரின் தோற்றம் இருந்தது படத்தின் மீது எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் துவங்கியது. இந்த படப்பிடிப்பில் கமல்ஹசன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும், படக்குழுவினருடன் கமல்ஹாசன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வந்தது.

60b50757bc478e0fcef4ad824c1b364e

இந்நிலையில், இப்படத்தில் கமல், பஹத்பாசில் விஜய் சேதுபதி ஆகியோருக்கு என்ன வேடம் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்களிடம் ஆர்வம் எழுந்துள்ளது. தற்போது அந்த தகவல் வெளியே கசிந்துள்ளது.

3a6aa12e37aa9f3fc2ad50ca5bcb53be

கமல்ஹாசன் ஓய்வு பெற்ற உயர் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளாராம். அதேபோல், பஹத் பாசில் ஒரு விஞ்ஞானியாக நடிக்கவுள்ளார். மேலும், டெடர் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளாராம். எனவே, இப்போதே நம்மால் கதையை யூகிக்க முடிகிறது. அதாவது. நாட்டுக்கு தேவையான பஹத் பாசிலின் கண்டுபிடிப்பை தட்டிப்பறிக்க விஜய் சேதுபதி முயற்சிப்பார். அவரின்  முயற்சியை கமல்ஹாசன் முறியடிப்பார் என்கிற எம்.ஜி.ஆர் கால கதையாக இருக்குமோ எனத்தோன்றுகிறது. ஆனாலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்பதால் திரைக்கதையில் மிரட்டியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a Comment