இந்தியன் 2-வா?… விக்ரமா?… நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கும் கமல்ஹாசன்…

Published on: May 31, 2021
---Advertisement---

1473b9c6bd7f199fdeec38ab46565f2e-2

லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க கடந்த வருடம் துவங்கிய திரைப்படம் இந்தியன் 2. ஆனால், படப்பிடிப்பில் விபத்து, கமலுடன் பஞ்சாயத்து என பல காரணங்களால் படப்பிடிப்பி நின்று போனது. காத்திருந்து காத்திருந்து வெறுத்துப்போன ஷங்கர், ராம்சரணை வைத்து தெலுங்கில் ஒரு படமும், ரன்வீர் சிங்கை வைத்து பாலிவுட்டில் அந்நியன் படத்தை ரீமேக் செய்வதாகவும் என அறிவித்தார்.  

அதைத்தொடர்ந்து, இந்தியன்2 வை முடிக்காமல் ஷங்கர் வேறு திரைப்படத்தை இயக்கக் கூடாது என லைக்கா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு இன்னும் வெளியாகவில்லை.

ac2a3328e495c8d57481b4c831856f10

இதற்கிடையில் தேர்தல் பணி முடிந்து விட்ட நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்க கமல்ஹாசன் முடிவெடுத்தார். தற்போது விக்ரம் படத்தில் கதையும் இறுதி வடிவத்திற்கு வந்துவிட்டது. எனவே, படப்பிடிப்பை துவங்க லோகேஷ் கனகராஜ் தயாராக இருக்கிறார். இப்படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளார்கள்.

ஆனால், நீதிமன்றத்தில் தீர்ப்பு எப்படி இருக்கும் என்று தெரிந்துவிட்டு விக்ரம் படப்பிடிப்பு துவங்குவோம். அதுவரைக்கும் அவர்களை காத்திருக்க சொல்லுங்கள் என கமல்ஹாசன் கூறிவிட்டாராம். ஏனெனில், ஷங்கர் உடனடியாக இந்தியன் 2 படத்தை துவங்க வேண்டும் என நீதிமன்றம் கூறிவிட்டால் இந்திய 2 படத்தில் நடிப்பது, இல்லையேல் விக்ரம் படத்தில் நடிப்பது என கமல் முடிவெடுத்துள்ளாராம்

ஒருபக்கம், இயக்குனர் ஷங்கரும் நீதிமன்ற தீர்ப்புகாக காத்திருக்கிறார். அதை வைத்தே ராம்சரன் படத்தை துவங்குவது என அவரும் காத்திருக்கிறாராம்.

Leave a Comment