பிக்பாஸ் மூலம் பல கோடிகள் வருமானம்... கமல்ஹாசனின் கணக்கு இதுதானா?....
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த நிகழ்ச்சி பிக்பாஸ். ஹிந்தியில் 8 சீசன்களுக்கும் மேல் சென்றுவிட்டது. தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்ததால் பெரும் வரவேற்பை பெற்றது.

16 போட்டியாளர்கள் ஒரே வீட்டில் தங்கி இருக்க வேண்டும். அவருக்கு தேவையானவற்றை அவர்களே செய்வதோடு, பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளையும் அவர்கள் செய்ய வேண்டும். விதிமுறைகளை சரியாக கடைபிடிக்கும் போட்டியாளர் இறுதியில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். தமிழில் இதுவரை முடிந்த 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசனே நடத்தினார்.

கடந்த சில வருடங்களாக அவர் அதிகமான திரைப்படங்களில் நடிக்கவில்லை. அதோடு, அரசியல் கட்சியையும் அவர் துவங்கியதால் தேர்தல் நேரம் தவிர மற்ற நேரங்களில் சினிமாவில் நடிப்பது, பிக்பாஸ் நிகழ்ச்சிகளை நடத்துவது என தன்னை பிஸி ஆக்கிக் கொண்டார். விரைவில் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் அவர்தான் தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சிக்காக அவருக்கு பல கோடிகள் சம்பளம் கொடுக்கப்படுவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்நிலையில், கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியில் ஒரு பங்குதாரராகவும் இருப்பதாகவும், அதன் மூலம் அவருக்கு பல கோடிகள் வருமானம் கிடைப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அதோடு, தொடர்ந்து சில சீசன்கள் அவர் மட்டுமே நிகழ்ச்சியை நடத்தும்படி ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளதாம்.அதனால்தான், விடாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் நடத்தி வருகிறார் என விபரம் அறிந்தவர்கள் கூறி வருகின்றனர்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 பற்றி செய்திகள் வெளியான போது, இந்த முறை சிம்பு நடத்துகிறார், சிவகார்த்திகேயன் நடத்துகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.