மகளை பார்க்க மும்பை போன கமல்ஹாசன் - வைரல் புகைப்படங்கள்

by adminram |

99f5b109625bf40b3b27651bddb7823d

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த 7ஆம் அறிவு திரைப்படம் அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். அதன்பின் 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருந்தார். அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார். கமல்ஹாசனின் மகள் என்றாலும் தனக்கென ஒரு கேரியரை அமைத்துக்கொண்டவர்.

6ba15a109e2094e0d891001e978f5eee

கடந்த சில வருடங்களாக அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. ஆனால், ஹிந்தியிலும், தெலுங்கிலும் நடித்து வருகிறார். பிரபாஸுடன் அவர் நடித்து வரும் சலார் திரைப்படத்தின் அவர் நடிக்கும் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது.

1ce2e2c8284d2832e5dd8ba4ad655f77

ஒரு பக்கம் கவர்ச்சியான மற்றும் வித்தியாசமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கவர்ச்சி, ஆபாசம் என எதையும் அவர் கண்டுகொள்வதில்லை. மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்ட அவர் அங்கு ஓவியர் ஒருவரை காதலித்து வருகிறார். இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

379e4d7b6520ae09c8fed62d533cc038

இந்நிலையில், ஆசை மகளை பார்க்க கமல்ஹாசன் மும்பை சென்றுள்ளார். அங்கு அவருடன் புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஸ்ருதி ‘இவர் என் அப்பா மட்டுமில்லை. எனக்கு பிடித்தமான ஒரு மனிதர்’ என்று பதிவிட்டுள்ளார்.

baf410acea7c740003792fc39eacdc5a-2

Next Story