துவங்கியது பிக்பாஸ் சீசன் 5 ஷூட்டிங்!.. இந்த முறை போட்டியாளர்கள் யார்?..
தமிழக மக்களிடம் வரவேற்பை பெற்ற டிவி நிகழ்ச்சி பிக்பாஸ். 2017ம் வருடம் ஒளிபரப்பான முதல் சீசன் வெற்றி பெற்றதால் தற்போது வரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. 4 சீசன்களையுமே கமல்ஹாசனே நடத்தினார். கடந்த வருடம் கொரோனோ பரவல் காரணமாக ஜூன் மாதம் துவங்க வேண்டிய நிகழ்ச்சி அக்டோபர் மாதம் தள்ளிப்போய் ஜனவரி மாதம் முடிந்தது. இதில் நடிகர் ஆதி டைட்டில் வின்னரானார்.
தற்போது 5வது சீசன் எப்போது துவங்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கமல்ஹாசன் தேர்தலில் பிஸியாக இருந்ததால் இந்த மாதம் ஜூன் மாதம் பிக்பாஸ் படப்பிடிப்பு துவங்கும் என செய்திகள் வெளியானது. ஆனால், கொரோனா 2ம் அலை காரணமாக இந்த முறையும் அக்டோபர் மாதத்திற்கு தள்ளி சென்றுள்ளது. இந்த முறை விஜய் டிவி மூலம் பிரபலமடைந்த புகழ், பாலா, ஷிவானி, அஸ்வின் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது. ஒருபக்கம் போட்டியாளர்களை ஒப்பந்தம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது.
இந்நிலையில், இந்நிகழ்ச்சிக்கான புரமோ ஷூட்டிங் நடைபெறும் புகைப்படம் வெளியாகியுள்ளது. எனவே, பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியின் டீசர் வீடியோ இந்த மாத கடைசியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறையும் கமல்ஹாசனே இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தில் நடிக்கவுள்ளார். ஆனாலும், வார இறுதியில் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் வருவார் என்பதால் அதற்கு ஏற்றார்போல் கால்ஷீட்களை அவர் அட்ஜெட்ஸ் செய்து கொள்வார் என கருதப்படுகிறது.