More

நடிச்சே ரொம்ப நாள் ஆச்சு.!..கமல் வெளியிட்ட விக்ரம் பட மேக்கிங் வீடியோ…..

மாஸ்டருக்கு பின் லோகேஷ் கனகரஜ் இயக்கும் திரைப்படம் விக்ரம். இப்படத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் என 4 வில்லன்கள் நடிக்கவுள்ளனர். இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மாநாடு, கைதி, மாஸ்டர் என அதிரடி திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜும், கலைஞானி கமலும் இணையவுள்ளதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

Advertising
Advertising

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்த போஸ்டரில் டெரர் லுக்கில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் என மூவரும் இடம் பெற்றுள்ளனர்.  மூன்று பேரும் நரைத்த முடி மற்றும் தாடியுன் மிரட்டலாக போஸ் கொடுத்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது. இந்த படப்பிடிப்பில் கமல்ஹசன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும், படக்குழுவினருடன் கமல்ஹாசன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற படப்பிடிப்பு தொடர்பாக கமல்ஹாசன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நேற்று நடந்த பூஜை மற்றும் படப்பிடிப்பின் மேக்கிங் வீடியோ இடம் பெற்றுள்ளது. மேலும், ‘விக்ரம் முதல் நாள். ஹை ஸ்கூல் பசங்க ரீயூனியன் போல் உணர்ந்தேன். கடந்த 50 வருடங்களில் நான் இத்தனை நாட்கள் நடிக்கமால் இடைவெளி விழுந்தது. லோகேஷ் கனகராஜ், அவரின் குழு, மற்றும் திறமையான நடிகர்களான விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் என விக்ரம் படத்தில் பணிபுரியும் அனைவரையும் வரவேற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Published by
adminram

Recent Posts