தமிழுக்கு படையெடுக்கும் தெலுங்கு தயாரிப்பாளர்கள்.. கைகொடுத்து வரவேற்கும் கமல்!

by adminram |

29749ddf8e2c86a50a831fc3120b5c78

சகலகலா வல்லவரான நடிகர் கமலஹாசன் நடிப்பில் மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பல்வேறு திசைகளிலும் கலக்கி வருகிறார். இவர் தனக்கென ஏதும் சொத்து சேர்த்துவைக்காமல் தான் சம்பாரித்த பணத்தையெல்லாம் சினிமாவிலே முதலீடு செய்து சினிமாவை வளர்க்கிறார்.

தமிழ் சினிமாவில் பல்வேறு புதுமைகளை அறிமுகப்படுத்தியவர் இவர்தான். சுனாமி என்ற வார்த்தை தமிழ்நாட்டுக்கு அறிமுகமாகும் முன்பே சுனாமியைப் பற்றி 'அன்பே சிவம்' படத்தில் பேசியிருப்பார். முதன்முதலில் கார்ட்டூன் கதாபாத்திரங்களை 'ஆளவந்தான்' படத்தில் கொண்டுவந்திருப்பார்.

எபோலா வைரல் உலகை ஆட்டுவிக்கும் முன்பே அதைப்பற்றி 'தசாவதாரம்' படத்தில் பேசியிருப்பார். இப்படி இன்னும் பல.. தான் கற்றுக்கொண்ட ஒவ்வொன்றையும் தனது படத்தில் அறிமுகப்படுத்திக்கொண்டே இருப்பார். சினிமாவில் முதன்முதலில் என்று எதை தேடினாலும் அதை கமல் செய்திருப்பார்.

eb49d3f2d8e4478727362f841734cc9f
Kamal

அந்த அளவிற்கு சினிமா மேல் தீராக்காதல் கொண்டவர். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெழுந்த்து, ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் கடந்த சில வருடங்களாக தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் பான் - இந்தியா படத்தில் கமல் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக சமீபத்தில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் நாராயாண்தாஸ்,சுனில் நரங், பரத் நரங், ராம் மோகன்ராவ் ஆகியோர் நடிகர் கமலை சந்தித்தனர்.

தற்போது இவர் விக்ரம், இந்தியன் 2 படங்களில் நடித்துவருகிறார். இப்படங்களை முடித்துவிட்டு பான் - இந்தியா படங்களில் நடிப்பார் என தெரிகிறது. கமலுடன் மட்டுமல்லாமல் மேலும் சில தமிழ் நடிகர்களை வைத்தும் பான் - இந்தியா படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்களாம் தெலுங்கு தயாரிப்பாளர்கள்.

Next Story