இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவர் வீசப்பட உள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டி20 கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இன்று மூன்றாவது டி 20 போட்டி ,ஹாமில்டனில் தொடங்க டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியன்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 65 ரன்கள் சேர்த்தார். கேப்டன் விராட் கோலி 38 மற்றும் ராகுல் 27 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில்179 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து களமிறங்கிய நியுசிலாந்து அணிக்கு மார்ட்டின் கப்தில் மற்றும் காலின் மன்ரோ சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். அதன் பின் வந்த கேன் வில்லியம்சன் அதிரடியாக ஆட ரன்ரேட் சீராக சென்றது. கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய அவர் பூம்ரா உள்ளிட்ட அனைத்து பவுலர்களையும் பதம் பார்த்தார்.48 பந்துகளில் 95 ரன்கள் சேர்த்த அவர் கடைசி ஓவரில் அவுட் ஆகி சதத்தை மிஸ் செய்தார்.
கடைசி ஓவரின் மூன்று பந்துகளில் 2 ரன்கள் எடுக்க வேண்டிய சூழல் வர நியுசிலாந்து அணியால் 1 ரன் மட்டுமே சேர்க்க முடிந்தது. கடைசிப் பந்தில் டெய்லர் போல்ட் ஆக ஆட்டம் டையில் முடிந்தது. அதனால் சூப்பர் ஓவர் மூலம் முடிவை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
ஏ ஆர்…
Ayothi: அயோத்தி…
திரைத்துறையில் நடிகர்…
விஜய் டிவியில்…
SK_ Keerthi…