More

உண்மையாக காதலித்தேன் எதிரியாக மாறிவிட்டார் – கங்கனா ஆதங்கம் !

அவர் நடித்த குயின் படம் அவருக்கு பல விருதுகளை பெற்றுத்தந்தது. அதோடு, செய்தியாளர் எழுப்பும் கேள்விகளுக்கு மிகவும் வெளிப்படையாகவும், தைரியமாகவும் பதிலளிப்பவர் கங்கனா ரனாவத். அத்துடன் பாலிவுட் சினிமாவில் நடக்கும் உண்மைகளை போட்டு உடைத்து அநீதிகளை தட்டி கேட்பார். கடந்த சில நாட்களாக சுஷாந்தின்  மரணத்திற்கு நீதி கேட்டு குரல்கொடுத்து வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில் தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் ஹிருத்திக் ரோஷனை உண்மையாகவே காதலித்தேன். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் திடீரென்று எதற்காக ஒரு எதிரிபோல மாறினார் என்பது எனக்கு இன்னும் மர்மமாகவே உள்ளது” என்று கூறியுள்ளார். இதே நிலை தான் சுஷாந்திற்கும் சாரா அலிகானை காதலித்த போது ஏற்பட்டிருக்கும். இந்த நட்சத்திர குழந்தைகள் இப்படிதான் வெளியில் இருந்து வரும் நடிகர்களை ஆசையில் விழ வைத்து பிறகு விட்டு விடுகிறார்கள் என கூறி பாலிவுட்டில் மீண்டும் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Published by
adminram