More

எந்த இயக்குனர் இவ்வளவு மரியாதை கொடுத்ததில்லை – கங்கனா ரணாவத் கண்ணீர்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை விவரிக்கும்  திரைப்படமாக ‘தலைவி’ படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜெ.வின் வேடத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஏ.எல்.எ விஜய் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில், பரபரப்பான அரசியல் விமர்சனங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 23ம் தேதி வெளியாகவுள்ளது. 

தலைவி படத்தின் டிரெய்லர் வீடியோவை வெளியிடும் விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் எல்.விஜய், அரவிந்த்சாமி, கங்கனா ரணாவத் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய கங்கனா ‘இதுவரை நான் நடித்த திரைப்படங்களில் எந்த இயக்குனரும் எனக்கு இவ்வளவு அங்கிகாரம், மரியாதை கொடுத்ததில்லை. இயக்குனர் விஜய் என்னை அணுகிய விதம், என் திறமையை புரிந்து கொண்டதை மிக முக்கியமானதாக பார்க்கிறேன்’ என கண்ணீர் மல்க பேசினார். அவரின் பேச்சு படக்குழுவினருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Published by
adminram

Recent Posts