முடியை வெட்டி…கெட்டப்ப மாத்தி அதிர்ச்சி கொடுத்த கனிகா.. எல்லாம் அதுக்காகத்தானாம்!…

தமிழ் சினிமாவில் ஃபைவ் ஸ்டார் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கனிகா. அதன்பின் வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சில மலையாள திரைப்படங்களிலும் நடித்தார். திடீரென ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்வார். மேலும், கவர்ச்சி உடையிலும் போஸ் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், திடீரென முடியை வெட்டி கிராப் ஸ்டைலுக்கு மாறி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஏம்மா அழகாத்தான இருந்தெ.. ஏன் இப்படி? என ரசிகர்கள் பொங்க, ‘கூல் கூல். நான் முடிவெட்டவில்லை. ஒரு படத்தில் இந்த கெட்டப்பில் நடிக்கிறேன். அதற்காக எடுக்கப்பட்ட டெஸ்ட்’ என கூறி ரசிகர்களுக்கு நிம்மதி கொடுத்துள்ளார்.

Published by
adminram