யாரும் கோபப்படாதீங்க ப்ளீஸ்!.. சினேகன் மனைவி நடிகை கன்னிகா டிவிட்….

Published on: July 31, 2021
---Advertisement---

1d72fab18ab4f6e36fb00f8f35fd7aa4-1

பாடலாசிரியர் சினேகனுக்கும், நடிகை கன்னிகா ரவிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. கமல்ஹாசன் தாலி எடுத்துக்கொடுக்க இவர்களின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இயக்குனர் பாரதிராஜா, பேராசிரியர் ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.  அதன்பின் திருமண வரவேற்பு ஒரு ஹோட்டலில் நடந்தது. இதில், திரையுலகினர் சிலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

a73a404a975e35ee1a522e27e9fdfb94

இந்நிலையில், கன்னிகா ரவி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘என் முதல் காதல் திருமணத்துடன் தொடர்கிறது. வாழ்த்திய எல்லோருக்கும் நன்றிங்க. கொரோனா சூழ்நிலையால் யாரையும் கூப்பிட முடியல கோபம் வேண்டாம்’ என பதிவிட்டு சினேகனுடன் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

63efc8f034b70dd590bf9461ec0c7398

கன்னிகா ரவி தொலைக்காட்சியில் வி.ஜே-வாக பணிபுரிந்தவர். ‘அமுதா ஒரு ஆச்சர்யக்குறி’ உள்ளிட்ட சில  சீரியல்களில் நடித்துள்ளார். டிவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
 

Leave a Comment