திரையில் 13 வருடங்களைக் கடந்த கார்த்தி – ரசிகர்கள் வாழ்த்து !

பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகுக்கு அறிமுகமான நடிகர் கார்த்தி இன்றோடு 14 ஆவது ஆண்டில அடியெடுத்து வைக்கிறார்.

தமிழ் சினிமாவில் பருத்திவீரனாக அறிமுகமான கார்த்தி தமிழ் சினிமா ரசிகர்களால் முதல் படத்திலேயே கொண்டாடப்பட்டார். அவருக்குக் கிடைத்த அந்த வரவேற்பு 50 ஆண்டுகளுக்கு முன்னர் பராசக்தி வெளியான போது சிவாஜிக்கு கிடைத்த  வரவேற்புக்கு நிகரானது என விமர்சகர்கள் கூறினர்.

அதன் பின்னர் ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, என ஹிட் படங்களில் நடித்து வந்த கார்த்தி, இடையில் சகுனி, அலெக்ஸ் பாண்டியன் என சறுக்கினார். ஆனாலும் ஓய்ந்துவிடாமல் மெட்ராஸ், கைதி போன்ற நல்ல கதையம்சம் உள்ள படங்களையும் தேடி நடித்து இப்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சந்தையை உருவாக்கி வைத்துள்ளார். சமீபத்தில் வெளியான அவரது கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதே அதற்கு சாட்சி.

இதுவரை 20 படங்களில் நடித்துள்ள கார்த்தி ஒரு  இயக்குனருடன் கூட இரண்டாவது முறையாக இணைந்தத்தில்லை என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். இப்போது அவர் நடிக்கும் சுல்தான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கிறார்.

Published by
adminram