நடிகர் தனுஷுக்கு எதிராக திடீரென தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட நோட்டீஸ் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே வடிவேலு மற்றும் சிம்புவுக்கு சில காலம் தயாரிப்பாளர் சங்கம் இதுபோல ரெட் கார்டு தடை விதித்து இருந்தது.
அதே போல தற்போது நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு உங்கள் படத்தில் நடிக்கிறேன் என அறிவித்துவிட்டு எந்தவொரு தயாரிப்பாளருக்கும் கால் சீட் கொடுக்காமல் அடுத்தடுத்து வேறு படங்களில் நடித்து வருகிறார் என்கிற குற்றச்சாட்டை தயாரிப்பு நிறுவனங்கள் முன்வைத்த நிலையில், தயாரிப்பாளர் சங்கம் தனுஷுக்கு ரெக்கார்டு தடை விதிக்க முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், தனுஷ் பற்றி தங்களுக்கு எந்த ஒரு புகாரும் இதுவரை வரவில்லை என்றும் நடிகர் சங்கத்தை கலந்து ஆலோசிக்காமல் தயாரிப்பாளர் சங்கம் தன்னிச்சையாக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருப்பது சரியானது கிடையாது என நடிகர் சங்க நிர்வாகிகளான கார்த்தி மற்றும் கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தனுஷ் நடித்த ராயல் திரைப்படம் திரையரங்குகளில் 50 கோடி ரூபாய் வசுலை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், திரைப்பட ஷூட்டிங்கை நிறுத்தப் போகிறோம் என்றும் தனுஷ் நடிக்கக் கூடாது என்றும் எந்தவொரு முன் அறிவிப்புமின்றி அறிக்கை விடுவது தவறான விஷயம் என கார்த்தி கண்டித்துள்ளார்.
முன்னதாக விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்ட போது, படமே தயாரிக்காத தயாரிப்பாளர் சங்கத்தினர் சொல்வதை எல்லாம் கேட்க முடியாது என விஷால் திமிராக பதில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 14…
Vijay tv:…
Rj Balaji:…
விமர்சனம் செய்வது…
விஜய் அக்டோபர்…