ரஜினிக்கு மாஸாக வாழ்த்து கூறிய கார்த்திக் சுப்பாராஜ் - வைரல் போஸ்டர்
நடிகர் ரஜினி இன்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். எனவே, அவருக்கு திரையுல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ஊடகங்ள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் பேட்ட படத்திற்காக உருவாக்கப்பட்ட வெளியாகாமல் இருந்த ஒரு போஸ்டரை வெளியிட்டு ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் ‘ பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா..இதோ பேட்ட டீம் உருவாக்கி வெளியாகாமல் இருந்த போஸ்டர்.. இன்னும் பல அதிசயங்களை அற்புதங்களை நிகழ்த்தி காட்டுங்கள் தலைவா..’ என பதிவிட்டுள்ளார்.
Happy birthday Thalaivaa...
Here's an unreleased poster - Thalaivar birthday special from #Petta team.. ❤️
இன்னும் பல அதிசயங்களை அற்புதங்களை நிகழ்த்தி காட்டுங்கள் தலைவா #HBDThalaivarSuperstarRAJINI @sunpictures @DOP_Tirru @anirudhofficial @tuneyjohn @vivekharshan pic.twitter.com/6gIdGv7Xad
— karthik subbaraj (@karthiksubbaraj) December 12, 2019