இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது தனுஷ் நடித்து முடித்துள்ள ’சுருளி’ என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக உள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுவதால் போஸ்ட் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளை முழுவீச்சில் அவர் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நடிகர் சந்தானம் தற்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்’ இதில் ‘டகால்டி’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு சந்தானத்திற்கு மிகப்பெரிய வெற்றி பெற்ற ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் சந்தானம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகிய இருவரும் இணைந்து ’காட்ஃபாதர்’ என்ற படத்தின் டிரைலரை இன்று மாலை 5 மணிக்கு ரிலீஸ் செய்ய ஒப்புக் கொண்டுள்ளனர். ஜெகன் ராஜசேகர் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் நட்டி மற்றும் லால் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
null
1960களில் தமிழகத்தின்…
ஜனநாயகன் திரைப்படம்…
நலன் குமாரசாமி…
விஜய் டிவியில்…
பார்க்கிங் திரைப்படம்…