தங்க மீன்கள் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் இந்த நடிகர் தானாம்… யார் தெரியுமா?

வழக்கமான மசாலா படங்களை மட்டுமே வழங்கி வந்த தமிழ் சினிமா சமீபகாலமாக சிறந்த படங்களை வழங்கி வருகிறது. மற்றமொழி இயக்குனர்கள் தமிழ் படங்களை ரீமேக் செய்ய ஆர்வம் காட்டும் அளவிற்கு தமிழ் படங்களின் தரம் உயர்ந்துள்ளது. ஒரு படம் வெற்றி பெற நடிகர்களின் நடிப்பு எந்தளவிற்கு முக்கியமோ அதைவிட இயக்குனரும், கதையும் முக்கியமாகும். அந்த வகையில் தமிழ் இயக்குனர்கள் சிறந்த கதைகளை கையாண்டு வருகிறார்கள். 

இந்த வரிசையில் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான படம் என்றால் கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான தங்க மீன்கள் படம் தான். இப்படத்தை இயக்குனர் ராம் இயக்கியதோடு மட்டுமின்றி அவரே நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு மகளாக சாதனா குழந்தை நட்சத்திரம் நடித்திருந்தார். 

Director Ram

தங்க மீன்கள் படத்தை பிரபல இயக்குனர் கெளதம் மேனன் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு கவிஞர் நா. முத்துக்குமார் பாடல் வரிகள் எழுதி இருந்தார். அவரது வரியில் உருவான “ஆனந்த யாழை மீட்டுகிறாள்” என்னும் பாடல் மாபெரும் வரவேற்பை பெற்றது. 

தந்தைக்கும், மகளுக்கும் இடையிலான பாசத்தை மையமாக வைத்து உருவாகி இருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இயக்குனர் ராம் இப்படத்தில் தந்தை கதாப்பாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக நடித்திருந்தார். அதேபோல் குழந்தையாக நடித்த சாதனாவும் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இவர்களின் உழைப்புக்கு பலனாக தங்க மீன்கள் படத்திற்கு 3 தேசிய விருது கிடைத்தது. 

Karunas

இந்நிலையில், தற்போது இப்படத்தில் ராம் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தில் முதலில் நடிகர் கருணாஸ் தான் நடிக்க இருந்தாராம். ஆனால், சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போகவே இயக்குனர் ராம் தானே அந்த கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

Published by
adminram