காதல் பட கரட்டான்டியை நினைவிருக்கிறதா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்....

by adminram |

0e13b2ba7491ee5210fd7cecf697a0af

தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு திரைப்படமாக தற்போது வரை உள்ள படம் என்றால் அது காதல் படம் தான். கடந்த 2004ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் மற்றும் சந்தியா நடிப்பில் வெளியான காதல் படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வழக்கமான சினிமா பாணியில் தவிர்த்து யதார்த்தமான வாழ்க்கையை இப்படம் கூறியிருந்தது.

தமிழ் சினிமாவில் ஆணவக்கொலை, சாதியால் பிரிந்த காதலர்கள் போன்றவற்றை மையப்படுத்தி எத்தனை[[யோ படங்கள் வந்திருந்தாலும், காதல் படம் இவற்றையெல்லாம் தாண்டி இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இப்படம் மூலமாகவே நடிகர் பரத் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்தார்.

2675b9d00a33e30726ff2d351e54ff5e
kathal arun

மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் அந்த சமயத்தில் அதிக வசூலை குவித்தது. அதேபோல் நீண்ட நாட்கள் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. இதுவரை எந்த ஒரு அறிமுக நடிகரின் படத்திற்கும் இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்ததில்லை. ஆனால் காதல் படத்திற்கு ரசிகர்கள் அந்த அளவிற்கு வரவேற்பு அளித்தனர்.

இப்படத்திற்கு மட்டுமல்லாமல் இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிலும் குறிப்பாக இப்படத்தில் நடிகர் பரத் உடன் மெக்கானிக் செட்டில் கரட்டாண்டி என்ற கேரக்டரில் வேலை பார்த்த சின்ன பையன் அருண் பலரது மனதிலும் இடம் பிடித்தார். இப்படத்தில் இவரது காமெடி அனைவராலும் ரசிக்கப்பட்டது. இப்படத்தை அடுத்து அருண் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டார்.

4dcbd30c590e9c2685fca1ecad90cb23-2
kathal arun

ஆனால் காதல் படத்திற்கு பின்னர் அருண் நடித்த வேறு எந்த படத்திலும் அவர் கவனிக்கப்படவில்லை. அதேபோல் இவருக்கும் சரியான படவாய்ப்புகள் அமையவில்லை. நீண்ட நாட்களாக இவர் குறித்த எந்த தகவலும் வெளிவராத நிலையில், தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் காதலித்த பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் அருண் திருமணம் செய்துள்ளார். தற்போது இவர்களது திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Next Story