Categories: latest news

இந்தியர் போல இல்ல.. விஜய் பட வில்லனுக்கு ஏர்போர்ட்டில் நடந்த சோகம்..

கத்தி மாஸ்: விஜய் கெரியரில் ஒரு சில படங்கள் காலங்காலமாக நின்னு பேசும் படமாக அமைந்திருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் அவருடைய கிராஃபையே மாற்றிய திரைப்படங்களாகவும் சில படங்கள் அமைந்திருக்கின்றன. அப்படி ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட படமாக அமைந்தது கத்தி படம். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருந்தார்.

ப்ளாக் பஸ்டர் ஹிட்: விவசாயி நிலத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் சுரண்டி திண்பதை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை அமைந்திருக்கும். இதில் ஒரு விஜய் ஊதாரித்தனமாக சுற்றும் கேரக்டர். இன்னொரு விஜய் விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் கேரக்டர். படம் பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

ஹீரோவா?: இந்த நிலையில் கத்தி படத்தில் வில்லனாக நடித்தவர் நீல் நிதின் முகேஷ். இவர் பாலிவுட்டில் கிட்டத்தட்ட 25 படங்களில் ஹீரோவாக நடித்தவர். மாதவனுடன் இணைந்து நடித்த ‘ஹைசாப் பராபர்’ என்ற படமும் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இவர் பார்ப்பதற்கு வெளி நாட்டு நபர் போல இருப்பார். இதுதான் இப்போது இவருக்கு பிரச்சினையாக மாறியிருக்கிறது.

தோற்றத்தால் வந்த ஆப்பு: பார்ப்பதற்கு இந்தியர் போல இல்ல. போலி பாஸ்போர்ட்டில் அமெரிக்காவில் நுழைந்ததாக குற்றம் சாட்டி கத்தி பட வில்லன் நீல் நிதின் முகேஷை சிறைபிடித்த நியூயார்க் விமான நிலைய காவலர்கள். எதை சொல்லியும் காதில் வாங்காமல் தன்னை நான்கு மணி நேரம் பிடித்து வைத்ததாக அவர் பரபரப்பாக பேட்டிக் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு நடந்த சம்பவம்தான் வேற லெவல்.

இது பற்றி நடந்த விசாரணையில் தன்னுடைய பெயரை கூகுள் செய்யச் சொல்லி நீல் கேட்டுக் கொண்ட பிறகே அவரை நம்பியுள்ளனர். இந்த செய்தி அறிந்ததும் நம் நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா? கூகுள் பண்ண பார்த்த சொன்ன நீல் பேசாமல் கத்தி படத்த பாருங்கனு கூட சொல்லியிருக்கலாம் என்றும் இது போல நடக்கும் என்று அன்றே கணித்தார் சூர்யா என்றும் விவசாயியை ஏமாத்தி நிலத்த வாங்குனல? அந்த பாவம்தான் என்றும் கமெண்டை தெறிக்க விட்டு வருகின்றனர்.

ராம் சுதன்

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

8 minutes ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

1 hour ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

1 hour ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

1 hour ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

4 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

6 hours ago