காட்மேன் எனும் வெப் தொடர் ரிலிஸ் செய்வது தடை செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அது குறித்து இயக்குனர் பா ரஞ்சித் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் வெளியான காட்மேன் சீரிஸ் தமிழகம் எங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அதில் இடம்பெற்றுள்ள சில வசனங்களும், காட்சிகளும் பிராமணர்களை இழிவு செய்வதாக சொல்லி போராட்டங்கள் நடத்தப் போவதாகவும் கண்டனங்கள் எழுந்தன. மேலும் அந்த தொடரை வெளியிடக்கூடாது எனவும் கோரிக்கைகள் எழுந்தன. அதையடுத்து தொடரை வெளியிட இருந்த ஜீ 5 நிறுவனம் அந்த தொடர் வெளியாகாது என அறிவித்து பின் வாங்கியது. இது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து இயக்குனர் பா ரஞ்சித் ‘காட்மேன், ஜீ5 தொடரின் முன்னோட்டத்தை ஒட்டி, அந்த தொடரின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் மீது அவதூறுகள் பரப்பியும், அச்சுறுத்தியும், பொய்வழக்குகள் தொடுக்கும் சமூக விரோத சனாதன கும்பல்களுக்கும், துணை நிற்கும் தமிழக காவல் துறைக்கும் வண்மையான கண்டனங்கள்!! இந்த தொடரை தயாரிப்பதில் உறுதுணையாக இருத்துவிட்டு, பிரச்சனை வந்தவுடன் , காட்மேன் தொடரின் குழுவினரை பாதுகாக்க தவறிய ஜீ5 நிறுவனத்தாரின் இச்செயல் ஏற்ப்புடையது அல்ல!!! மேலும் இத்தொடரை வெளியிட உரிய நடவடிக்கை மேற்கொள்க!!’ எனக் கூறியுள்ளார்.
Viduthalai part2:…
Viduthalai2: ஒளிப்பதிவாளர்…
சிவகார்த்திகேயன் படங்கள்…
கங்குவா படத்தின்…
Director Atlee:…