விஜயை அடிக்கணுமா? முடியாதுனு மறுத்த நடிகர்.. அதுக்கு விஜய் சொன்ன ஐடியா என்ன தெரியுமா?

அரசியல் களத்தில் விஜய்: தற்போது விஜய் அரசியல் களத்தில் அனைவரையும் துவம்சம் செய்து கொண்டிருக்கிறார். அவர் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜனநாயகன் என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் பெயரிலேயே அரசியல் பிரபலங்களை திகிலடைய வைத்திருக்கிறார் விஜய். அரசியலில் தீவிரமாக இறங்கி விட்டதால் இனி யாருக்கும் பயப்பட போவதில்லை என படத்தின் தலைப்பிலேயும் மாஸ் காட்டி வருகிறார் விஜய்.
பிரச்சினை வரும்: அதேபோல படமும் ஒரு அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விஜயின் படங்கள் ரிலீஸ் ஆகும் பொழுது ஏதாவது ஒரு வகையில் அவருடைய படங்கள் ரிலீஸில் பிரச்சனை வரும். ஆனால் இப்போது அவர் அரசியலில் இறங்கி விட்டதால் கண்டிப்பாக அவர் நடித்துவரும் இந்த ஜனநாயகம் திரைப்படத்திற்கும் ஏதாவது ஒரு வகையில் பிரச்சனை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாருமே எதிர்பார்க்கல: ஆனால் அதை எல்லாம் பற்றி விஜய் கண்டு கொள்வதாக இல்லை. துணிந்து இறங்கி விட்டோம். முன்னேறி செல்வோம் என்ற நோக்கத்தில் அடுத்தடுத்த ஸ்டெப்புகளை எடுத்து வைத்துக் கொண்டு வருகிறார் விஜய். ஆரம்பத்தில் யாரிடமும் எளிதாக பேசாமல் மிகவும் அமைதியான நபராகவே விஜய் இருந்து வந்தார். ஆனால் இப்போது அரசியலுக்குள் வந்து விட்டதால் யாரும் எதிர்பார்க்காத விஜயை இப்போது காண முடிகிறது.
அடிக்கணுமா?:அவருடன் பழகிய நண்பர்களே இது நம்ம விஜயா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ராஜ்கிரண் விஜய் பற்றி ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார். காவலன் திரைப்படத்தில் விஜய்யும் ராஜ் கிரணும் ஒன்றாக நடித்திருந்தனர். அசினுக்கு அப்பாவாக ராஜ்கிரண் நடித்திருப்பார். அந்த படத்தில் ஒரு காட்சியில் விஜயை அடிக்கும் மாதிரியான ஒரு சீன். ஆனால் ராஜ்கிரண் விஜயை நான் எப்படி அடிக்க முடியும். அதுவும் படத்தின் கதை படியும் படத்தில் விஜயின் கேரக்டர் படியும் பார்த்தால் விஜய் மிகவும் நல்லவர் என்பது ஆடியன்ஸ்களுக்கு கண்டிப்பாக தெரியும்.
அப்படி இருக்கும்போது நான் எப்படி அவரை அடிக்க முடியும். அது நன்றாக இருக்காது. ரசிகர்களும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் நான் அவரை அடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டு கேரவனுக்கு போய்விட்டாராம் ராஜ்கிரண். இதை படத்தின் இயக்குனர் சித்திக் விஜய்யிடம் போய் சொல்ல நான் போய் பேசி பார்க்கிறேன் என விஜய் வந்தாராம். ராஜ்கிரனிடம் விஜய் எவ்வளவோ சொல்லியும் ராஜ்கிரண் அந்த காட்சியில் அடிக்க மறுத்திருக்கிறார்.
அதன் பிறகு கடைசியாக சரி இப்போது ஐந்து சீன்களில் என்னை அடிப்பது மாதிரி இருந்தால் ஒரே ஒரு முறை மட்டும் அடித்து விட்டுப் போங்கள் என்ற விஜய் சொன்னாராம். இது ராஜ்கிரணுக்கு ஏற்புடையதாக இருக்க ஒரு காட்சியில் விஜயை தட்டிய மாதிரி அடித்திருப்பார் ராஜ்கிரண். இதை ஒரு பேட்டியில் ராஜ்கிரணே கூறியிருக்கிறார்.