பழநிபாரதியைப் பார்த்து அதிர்ந்து போன வாலி...! இன்னும் 200 வருஷம் ஆனாலும் ப்ரஷா இருக்குற பாடல் இதுதாங்க..!

by ராம் சுதன் |

நடிகர் கார்த்திக்கின் 'உள்ளத்தை அள்ளித்தா' படம் நடிகர் அஜீத்தின் 'வாலி' யோடு வந்தது. இது பல பேரோட வாழ்க்கையையே மாற்றியது. பலருக்கு ரீ என்ட்ரியைக் கொடுத்தது. அதிலும் இந்த அழகிய லைலா பாடலில் ரம்பா என்ட்ரி ஆகுறாங்க. இதுல கேமரா, இசை, எடிட்டிங், நடனம், காட்சி வடிவமைப்பு என எல்லாமே வித்தியாசமாக இருக்கும்.

இப்போது பார்த்தாலும் இந்தப் பாடல் அவ்வளவு அழகா இருக்கும். அதிலும் சிற்பி இந்தப் பாடலுக்கு வித்தியாசமாக இசை அமைத்து இருப்பார். ஒரு அரேபியன் இசை வேணும்னு இயக்குனர் சுந்தர்.சி. சொன்னதால சிற்பி அந்த வடிவத்தில் பண்ணுகிறார். இந்தப் பாடலை பாடகர் மனோ வழக்கமாக இல்லாமல் ஒரு ஹைபிட்சில் குரலை மாற்றிப் பாடியிருப்பார்.

இந்தப் பாட்டுக்குப் பிறகு மனோ தொடர்ச்சியாக இதே ஸ்டைலில் பாடினார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ரசிகர்களுக்கு அது சலிப்பை உண்டாக்கியதால் மீண்டும் பழைய பாணியிலேயே பாட ஆரம்பித்தார். இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் பழனிபாரதி. வித்தியாசமாக ரொமான்ஸ் வர்ற மாதிரியான வரிகளை அழகாகப் போட்டு இருப்பார். இடையில் ஒன்றிரண்டு ஆங்கில வார்த்தைகளைப் போட்டு அசத்தியிருப்பார்.

இந்தப் படத்துக்கு சிற்பியை இசை அமைக்கச் சொல்கிறார் சுந்தர்.சி. அதுவும் ஒரே வாரத்திற்குள் பாடல்கள் வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார். சிற்பியும் ஒரே வாரத்திற்குள் பாடல்களை உருவாக்குகிறார். அதுல 'அழகிய லைலா பாடல் தான் மாஸ்டர் பீஸ். அழகிய லைலா... அவள் இவளது ஸ்டைலா, சந்தன வெயிலா, இவள் மன்மத புயலா, அடடா பூவின் மாநாடாம், அழகுக்கு இவள் தான் தாய்நாடாம்..'. என்று அழகான வரிகளைப் போட்டு இருப்பார். அதே போல சரணங்களிலும் அசத்தியிருப்பார். இந்தப் பாடல் இன்னும் 200 வருஷம் கழித்துக் கேட்டாலும் ரொம்ப புதுசாகத் தான் இருக்கும்.

கார்த்திக் ரீ என்ட்ரி, சுந்தர்.சி., டான்ஸ் மாஸ்டர், சிற்பி, கவிஞர் பழனிபாரதி, கவுண்டமணி என அனைவருக்குமே வே லெவலைக் கொடுத்தது இந்தப் படம் தான். இந்தப் படம் வந்து கொஞ்சநாளில் வாலியே பேட்டி கொடுத்தாராம். இந்தப் பாடலைக் கேட்டு விட்டு நானே ரொம்ப அதிர்ந்து போனேன்யா... யார்றா அப்படி ஒருவன் பாட்டு எழுதிருக்கானேன்னு கவிஞர் வாலியே சொன்னாராம். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

Next Story