Categories: latest news tamil movie reviews

கவுத்துப்புட்டீங்களே! திரௌபதிக்கு விகடன் போட்ட விமர்சனம் – இயக்குனர் போட்ட கோப டிவிட்

இப்படம் கடந்த வாரம் வெளியானது. ஒரு குறிப்பிட்ட சாதியின் பெருமையை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டதால் அப்பிரிவின் ஆதரவும், மற்றவர்கள் இப்படத்தை கடுமையாகவும் எதிர்த்து வருகின்றனர்.

குறிப்பாக, குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த பெண்களை குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த வாலிபர்கள் காதல் என்கிற பெயரில் ஏமாற்றி வாழ்க்கையை பாழ் செய்வதுவிடுகின்றனர் என்கிற கருத்து இப்படத்தில் கையாளப்பட்டுள்ளது. எனவே, சில சமூகத்தை சேர்ந்த பிரிவினர் இப்படத்தை ஆதரித்தும், சிலர் அதை எதிர்த்தும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆனந்த விகடன் வார இதழ திரௌபதி படத்திற்கு வெறும் 29 மதிப்பெண் மட்டுமே அளித்துள்ளது. திரைத்துறையை பொறுத்தவரை விகடன் எத்தனை மதிப்பெண் கொடுக்கிறது என்பது சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. அதிக மதிப்பெண்கள் கொடுத்தால் அதையே விளம்பரமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  ஆனால், 29 மதிப்பெண் மட்டுமே அளித்து படத்தை கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் மோகன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘விகடன் மட்டுமல்ல.. பல இடங்களில் முகமுடி கொண்ட மனிதர்கள் தான்.. இவர்களை இடது கையால் ஓரம்கட்டி விட்டு வலது கையால் அடுத்த படத்திற்கு திரைக்கதை வசனம் எழுத போறேன்.. புட்டிபால் பசங்க..’ என விமர்சித்துள்ளார்.

Published by
adminram