இந்த படத்துக்கு அவர் எதுக்கு? - சிம்புவின் புதிய படத்தில் அந்த நடிகை...

by adminram |

e30e13a6c76d8b11073107df303d762c-4

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த போஸ்டரில் சிம்பு இதுவரை பார்த்திராத தோற்றத்தில் நிற்கிறார். சிம்பு படத்தின் இந்த போஸ்டர் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

435f8d1cd4787f60ebf29f183d738725-1

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருச்செந்தூரில் சமீபத்தில் துவங்கியது. இப்படத்தில் சிம்புவின் அம்மாவாக ராதிகா சரத்குமார் நடித்து வருகிறார். இவர்கள் தொடர்பான காட்சிகள் தற்போது படம்பிடிக்கப்பட்டு வருகிறது. அப்படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது. அடுத்த கட்டப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ளது. அடுத்து மும்பை மற்றும் வெளிநாட்டிலும் சில காட்சிகள் படம்பிடிக்கப்படவுள்ளது.

c2c207cb07267444c068e65ed2bc07ca

இந்நிலையில், இப்படத்தில் மராத்தி, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்த கயடு லோகர் இப்படத்தில் சிம்புவுக்கு நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இப்படத்தின் போஸ்டரை பார்த்தால் சிம்புவுக்கு எதற்கு ஜோடி என்றுதான் கேட்க தோன்றுகிறது.

Next Story