Entertainment News
மனசாட்சியே இல்லை!.. நீச்சல் குளத்தில் கீர்த்தி சுரேஷ் ஒருவரை எப்படி தள்ளி விடுறாரு பாருங்க!..
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்துடன் ஜாலியாக நீச்சல் குளத்தில் விளையாடும் வீடியோ ஒன்றை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்துடன் ஜாலியாக நீச்சல் குளத்தில் விளையாடும் வீடியோ ஒன்றை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமீபத்தில், நடைபெற்ற ரகு தாத்தா படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக சென்னைக்கு வந்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.
ஒட்டுமொத்த முதுகும் ஃப்ரீயா காத்து வாங்கும் வகையில் இருந்த அவரது ஜாக்கெட்டை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி போய் விட்டனர். இந்தி திணிப்பு பற்றிய படத்தில் நடிக்கிறேன், இந்தி படத்தில் நடிக்கிறேன் என அவரே கன்ஃபியூஸ் ஆகி விளக்கம் கொடுப்பது போல எப்படியோ சமாளித்து பேசிவிட்டார்.
இந்தி படத்தில் நடிப்பேன் என்பது தெரிந்திருந்தால் இந்த படத்தில் நடித்திருக்கக் கூட மாட்டேன் என்றும் பேட்டி ஒன்றில் கீர்த்தி சுரேஷ் பேசினார். மேலும், தன்னை பற்றி வரும் கிசுகிசுக்கள் பற்றி பேசிய கீர்த்தி சுரேஷ் விஜய் பேசியதை மேற்கோள் காட்டி வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்தால் அது உண்மையாகி விடும் என்றார்.
பாலிவுட்டில் அட்லீ தயாரிப்பில் வருண் தவானுக்கு ஜோடியாக தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மைதான் படத்தில் மிஸ்ஸான பாலிவுட் வாய்ப்பு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பேபி ஜான் வெளியானதும் கீர்த்தி சுரேஷ் அங்கேயும் அசத்தல் என்ட்ரி கொடுத்து நிறைவேறிவிடும்.
ஷூட்டிங் எல்லாம் ஓவர் ஆன நிலையில், ரகு தாத்தா படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான புரமோஷன் பணிகளையும் நிறைவு செய்த கீர்த்தி சுரேஷ், தனது குடும்பத்தினருடன் நீச்சல் குளத்தில் விளையாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், விளையாட்டாக ஒருவரை தண்ணீரில் பிடித்துத் தள்ளிவிடும் காட்சிகளும் வெளியாகி உள்ளன. மேலும், கிரிக்கெட் விளையாடும் கீர்த்தி சுரேஷின் அழகை ரசித்துக் கொண்டே இருக்கலாம் என கமெண்ட்டுகள் குவிகின்றன.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க..
https://www.instagram.com/p/C945ASDSyYS/