More

பொட்டி படுக்கையை தூக்கிட்டு எங்கம்மா கிளம்பிட்ட? கீர்த்தி சுரேஷுக்கு ஒரு டாட்டா சொல்லுங்கப்பா!

தமிழ் சினிமாவில் “இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இதனையடுத்து ‘ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2’ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

Advertising
Advertising

தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான “மகாநடி” படம் கீர்த்திக்கு பேரும் , புகழும் பெற்றுத்தந்ததுடன் சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியது. இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கி கௌரவித்தனர். அதன் பின்னர் மார்க்கெட்டின் உச்சத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது கீர்த்தி சுரேஷ் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடித்துள்ள Sarkaru Vaari Paata படத்தின் படப்பிடிப்பிற்காக பொட்டி படுக்கையுடன் உற்சாகமாக வெளிநாடு செல்லும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். நீங்களும் கீர்த்திக்கு ஒரு டாட்டா சொல்லி வழி அனுப்பி வைய்யுங்கப்பா…

Published by
adminram

Recent Posts