ப்பா செம டேன்ஸ்!.. விஜய்க்கு நடனமாடி வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்(வீடியோ)….

நடிகர் விஜய் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், விஜய் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜயின் பிறந்தநாள் டிரீட்டாக அவர் தற்போது நடித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியானது.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். விஜய்-சிம்ரன் இணைந்து ஆடிய ஆல் தோட்ட பூபதி பாடலுக்கு நடனமாடி வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்து வருகின்றனர். 

கீர்த்தி சுரேஷ் விஜயுடன் சர்கார், பைரவா ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.    

 

Published by
adminram