பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடித்த கே.ஜி.எஃப் திரைப்படம் 2018ம் ஆண்டு வெளியானது. இப்படம் இந்தியா முழுவதும் பெரிய அளவில் ரீச்சானது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளில் இப்படம் வரவேற்பை பெற்றது. தற்போது கே.ஜி.எஃப். படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளனர். இப்படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படத்திற்கு அழகான பாடல்களை கொடுத்ததோடு, பின்னணி இசையில் மிரட்டியிருந்தவர் ரவி பஸ்ரூர். கேஜிஎப் முதல் மற்றும் 2ம் பாகம் என திரைப்படத்திற்கும் இவர்தான் இசையமைப்பாளர்.
இந்நிலையில், இவரின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இரும்பு பட்டறையில் இரும்படித்துகொண்டு அவர் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள்தான் அவை. இதைப்பார்த்த பலரும் இவரா கே.ஜி.எப் பட இசையமைப்பாளர் என வாயை பிளந்துள்ளனர்.
அந்த புகைப்படத்தின் பின்னணியை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். கடந்த வரும் மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா அலை வேகமாக பரவ துவங்கிய போது கர்நாடகாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அப்போது, கர்நாடகா மாநிலத்தில் உடுப்பிக்கு அருகில் உள்ள குண்டபுரா எனும் தனது சொந்த ஊருக்கு சென்ற அவர், தனது தந்தை நடத்தி வரும் இரும்பு பட்டறைகு சென்று அவருக்கு உதவியாக இருந்துள்ளார். இந்த புகைப்படத்தை அவரே பகிர்ந்து ரூ.35 சம்பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கார்த்தி நடிப்பில்…
விஜய் தொலைக்காட்சி…
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…