More

நவம்பரில் கேஜிஎஃப் 2 ஷூட்டிங் இருக்கு – சலூன் காரரிடம் சொன்ன சஞ்சய் தத்!

நடிகர் சஞ்சய் தத் புற்றுநோய் சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில் கேஜிஎஃப் படத்தின் படப்பிடிப்பில் நவம்பர் மாதம் கலந்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.

Advertising
Advertising

நடிகர் சஞ்சய் தத் கேஜிஎஃப் 2 படத்தில் ஆதிரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமான நிலையில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு முதல் கட்ட கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதையடுத்து அவர் சிகிச்சையை இப்போது மும்பையிலேயே பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவர் சலூன் கடைக்கு சென்ற போது அவரை வீடியோ எடுத்து அந்த சலூன் கடைக்காரர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சஞ்சய் தத் ‘ வீட்டை விட்டு வெளியே வருவது எப்போது உற்சாகமானது. நான் கே ஜி எஃப் 2 படத்தில் நடிப்பதற்காக இந்த தாடியை வளர்த்து வருகிறேன். நவம்பர் மாதம் அந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.

Published by
adminram

Recent Posts