ஜெயம் ரவியின் வாழ்க்கையில் விளையாடிய குஷ்பு?!. இவ்வளவு நடந்திருக்கா?!...

by ராம் சுதன் |

ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ரவி. ஜெயம் படம் அறிமுகம் என்பதால் ஜெயம் ரவியாக மாறினார். அதன்பின் தொடர்ந்து தனது அண்ணன் ராஜாவின் இயக்கத்தில் தெலுங்கில் வெற்றி பெற்ற தமிழ் பட ரீமேக்கில் நடித்தார். அப்படி அவர் நடித்து வெளியான படங்கள் ஓரளவுக்கு வசூலை பெற்றது.

எனவே, தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடிக்க துவங்கினார். பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடித்த கோமாளி மற்றும் அண்ணன் ராஜாவின் இயக்கத்தில் நடித்த தனி ஒருவன் ஆகிய படங்கள் பெரிய வெற்றியை பெற்றது.

தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் என்பவரின் மகள் ஆர்த்தியை 2009ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 மகன்களும் உண்டு. கடந்த சில வருடங்களாகவே தனது மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் படங்களில் நடித்து வந்தார். அங்குதான் பிரச்சனை துவங்கியது.

மாமியாருக்கும் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு இப்போது விவாகரத்து வரை கொண்டு போய்விட்டது. குடும்ப உறவினர்களும், நண்பர்களும் பேசி பார்த்தும் பலன் இல்லை. கணவர் ஜெயம்ரவியுடன் எடுத்துக்கொண்ட அனைத்து புகைப்படங்களையும் இன்ஸ்டகிராமிலிருந்து நீக்கிவிட்டர் ஆர்த்தி.

ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதாவுக்கு நெருக்கமான இருந்தவர் குஷ்பு. ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் இடையே திருமணம் ஆனதன் பின்னணியில் அவர்தான் முக்கிய காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அவர் என்ன நினைத்து செய்தாரோ, அது இப்போது ஜெயம்ரவிக்கு பிரச்சனையை ஏற்படுத்தி விட்டது.

அதேநேரம், ஜெயம் ரவியோ, ஆர்த்தியோ இன்னமும் நீதிமன்றத்தில் விவாகரத்து தாக்கல் செய்யவில்லை. பேச்சு வார்த்தை தொடர்ந்து போய்க்கொண்டிருப்பதாகவே சொல்லப்படுகிறது.

Next Story