குழந்தைகள் ஆபாச வீடியோ ; சிக்கும் 15 பேர் : தீவிர விசாரணையில் போலீசார்

Published On: December 14, 2019
---Advertisement---

abf60d4cf77c3961d9f31be52b29178d

ஆபாச படங்களை பார்ப்பதால் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதாக கருதப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, குழந்தைகள் ஆபாச படங்கள் தொடர்பான 5 ஆயிரம் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும்,  குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்கள் மற்றும் பகிர்பவர்கள் பட்டியலை போலீசார் தயார் செய்துள்ளனர். 

இதைத் தொடர்ந்து, முதல் நபராக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ்(42) என்பரையும் கைது செய்துள்ளனர்.   பட்டதாரி வாலிபரான அவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.  

இவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில்,  நிலவன், ஆதவன் என்கிற பெயரில் முகநூலில் இவர் சுமார் 15 பேருக்கும் இவர் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பகிர்ந்து வந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர்களின் பட்டியலை தயார் செய்துள்ள காவல்துறையில் விரைவில் அவர்களிடம் விசாரணை நடத்தவுள்ளனர்.  இதில் சிலர் மருத்துவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

Leave a Comment