சண்டிகாரில் உள்ள நியுஸ் 18 தொலைக்காட்சி அலுவலகத்துக்கு வந்து தன் காதலியைக் கொலை செய்ததை மணிந்தர் சிங் என்பவர் ஒத்துக்கொண்டுள்ளார்.
சண்டிகார் மாவட்டத்தைச் சேர்ந்த மணிந்தேர் சிங் என்பவரும் சப்ரஜித் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். ஆனால் சப்ரஜித்துக்கு வேறொரு ஆணுடன் உறவு இருப்பதாக மணிந்தேர் சந்தேகித்துள்ளார். இதனால் கடந்த மாதம் 31 ஆம் தேதி அவரை ஹோட்டலுக்கு வரவழைத்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இது சம்மந்தமாக வாக்குவாதம் எழுந்துள்ளது. இதனால் கோபத்தில் மனிந்தேர் சிங் சப்ரஜித்தின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். போலீஸார் சப்ரஜித்தின் கொலை தொடர்பான வழக்கு விசாரணையை மேற்கொண்டு வரும் வேளையில் திடீரென சண்டிகார் நியுஸ் 18 தொலைக்காட்சி அரங்குக்கு வந்து தன் காதலியைக் கொலை செய்ததை ஒத்துக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவமானது சண்டிகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலிஸார் மணிந்தேரைக் கைது செய்துள்ளனர்.
திரையுலகில் ஒரு…
நடிகர் சிவக்குமார்…
இந்திய சினிமாவில்…
கடந்த 10…
1960களில் தமிழகத்தின்…