5 மொழிகளில் ரிலீஸ் ஆகும் கீர்த்திசுரேஷ் திரைப்படம்!

கீர்த்தி சுரேஷ் நடித்த திரைப்படம் ஒன்று ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கிய திரைப்படம் மலையாள திரைப்படம் ’மராக்கர் அரபிக்கடலிண்டே சிம்மம்’. மலையாளத்தில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ் உள்பட 4 மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் வரும் மார்ச் 26ஆம் தேதி இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் தற்போது வெளியிட்டுளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடித்த ஒரு தமிழ் படம் கூட வெளியாகாத நிலையில் இந்த ஆண்டு அவரது நடிப்பில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

மோகன்லால், கீர்த்திசுரேஷ், மஞ்சுவாரியர், சுனில்ஷெட்டி, அர்ஜூன், பிரபு, நெடுமுடிவேணு, சுஹாசினி உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் திரு ஒளிப்பதிவில், அய்யப்பன் நாயர் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்த படம் சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Published by
adminram