இந்தியாவுலதான் கோபேக்குன்னா…. அமெரிக்காவுல டோண்ட் கம்பேக் – ட்ரம்ப்பை வச்சு செய்யும் நெட்டிசன்கள் !

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை மீண்டும் அமெரிக்காவுக்கு வராதீர்கள என ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவுக்கு அரசியல் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று மதியம் வந்தார். அவருக்கு மிக பிரம்மாண்டமாக வரவேற்புகள் அளிக்கப்பட்டு நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட இருக்கிறார். இந்நிலையில் இன்று காலை அவர் இந்தியா வருவதற்கு முன்பாக டிவிட்டரில் #GobackTrump என்ற ஹேஷ்டேக் ட்ரண்ட் ஆகியது. வழக்கமாக மோடிக்குதான் நம்மாட்கள் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்துவார்கள்.

இந்தியாவில்தான் இந்த நிலைமை என்றால் அமெரிக்காவிலோ அவரை இன்னும் மோசமாக விமர்சனம் செய்யும் வகையில் ஒரு நபர் ட்ரம்பின் டுவிட்டிலேயே கமெண்ட் செய்துள்ளார். ட்ரம்ப் இந்திய பயணத்தை முன்னிட்டு இன்று காலை ‘நான் இந்தியாவுக்கு கிளம்பிவிட்டேன்’ என டிவிட்டரில் சொல்ல, அதில் குறும்புக்காரர் ஒருவர் ‘தயவு செய்து திரும்பி வராதீர்கள்’ என கமெண்ட் செய்துள்ளார்.

Published by
adminram