கும்பகோணத்தை சேர்ந்த அறிவழகனின்(65) மனைவி மஞ்சுளா(60). மஞ்சுளா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்று கீமோதெரபி சிகிச்சை கொடுக்க வேண்டிய சூழ்நிலையில், ஊரடங்கு உத்தரவால் அவர்களால் பேருந்தில் பயணம் செய்ய முடியவில்லை.
மேலும், கார், ஆம்புலன்ஸில் செல்ல பணம் இல்லாததால் தனது சைக்கிளிலேயே புதுச்சேரிக்கு மனைவியை அழைத்து செல்ல அறிவழகன் முடிவெடுத்தார். எனவே அங்கிருந்து 150 கி.மீட்டர் இரவு முழுவதும் பயணம் செய்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்றார்.
அந்த தகவலை அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த மருத்துவர்கள் 2 நாட்கள் அவர்களை அங்கே தங்க வைத்து மஞ்சுளாவிற்கு சிகிச்சை அளித்தனர். தங்களின் சொந்த செலவில் அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்தனர்.
சிகிச்சை முடிந்த மனைவியை மீண்டும் சைக்கிளில் அழைத்து செல்ல அறிவழகன் தயாரன போது அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்புலன்ஸில் சைக்கிளோடு சேர்த்து அவர்களையும் ஏற்றி கும்பகோணத்திற்கு இலவசமாக அனுப்பி வைத்தனர்.
எனது மனைவிதான் எனக்கு எல்லாமே. அவள் இல்லாமல் நான் இல்லை என அறிவழகன் கூறியது மருத்துவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…
தனுஷ் மற்றும்…
கங்குவா படத்திற்கு…
Pushpa 2:…