">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
குசுபு ஆண்ட்டி என மோசமாக விமர்சித்த இணையவாசி! பளார் பதிலடி கொடுத்த குஷ்பு!
நடிகையும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான குஷ்பு குறித்து இணையத்தில் மோசமாக விமர்சனம் செய்த ஒரு நபருக்கு அவரே பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகையும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான குஷ்பு குறித்து இணையத்தில் மோசமாக விமர்சனம் செய்த ஒரு நபருக்கு அவரே பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் நாயகியாக விளங்கிய குஷ்பூ இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டு சின்னத்திரை பக்கம் கவனம் செலுத்தினார். அதன் பின் அரசியலில் குதித்த அவர் முதலில் திமுகவிலும், பின்னர் காங்கிரஸிலும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் சமூகவலைதளம் மூலமாக கொரொனா பேரிடர் குறித்தும் நாட்டு மக்களின் இன்னல் குறித்தும் பேசினார். அப்போது அவரது வீடியோவுக்கு கீழ் ஒருவர் ‘குசுபு ஆண்டி… இன்னும் விக் தான் வைக்கிறீங்களா ?’ என அவரைக் கேலி செய்யும் விதமாக பேசினார்.
அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக குஷ்பூ ‘இந்த முட்டாள் பீசு எங்கிருந்து வந்துச்சு ? தலையில்லாத முண்டமே… முகத்தையும் உன்னுடைய நிஜ பெயரையும் தைரியமாக உலகிற்கு காட்ட முடியுமா?… கோழையே, நீ என்னுடைய முடியை பார்த்து ரொம்ப பொறாமைப்படுறன்னு மட்டும் எனக்கு நல்லா புரியது.’ எனப் பதிலடி கொடுத்துள்ளார்.