தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட புதிய அப்டேட்
விஜய் நடிக்கும் தளபதி 69ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. கோட் திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் திரைப்படம் தான் அவருடைய 69ஆவது திரைப்படம். இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்குகிறார். படத்தில் பூஜா ஹெக்டே ,மமீதா பைஜூ ,பாபி தியோல் உட்பட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தை கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது விஜய் கட்சி தொடங்கி மிகப்பெரிய மாநாட்டையும் நடத்தி முடித்த நிலையில் அவருடைய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இது அவருடைய கடைசி படம் என்பதால் அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்கள் காட்சிகள் ஏதாவது இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அரசியல் ரீதியாக விஜயின் படங்கள் சர்ச்சைகளுக்கு உள்ளாகும் நிலையில் அவர் அரசியலில் முழுவதுமாக இறங்கிய பிறகு உருவாகும் திரைப்படம் என்பதால் கண்டிப்பாக இவருடைய இந்த படத்தின் ரிலீசில் பிரச்சனை இருக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது. ஏற்கனவே அவருடைய இந்த 69 ஆவது திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அடுத்த வருடம் பொங்கல் ரிலீஸ் ஆக இந்த படம் ரிலீஸ் ஆகும் என சமீபத்திய தகவல் கிடைத்துள்ளது. அதே சமயம் அடுத்த வருடம் அவர் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் ஏதாவது ஒரு வகையில் அந்தப் படத்திற்கும் தேர்தலுக்கும், சம்பந்தம் இருக்கும்மாறு சில வசனங்கள் அந்த படத்தில் வைத்திருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தளபதி 69 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றி அதனுடைய தயாரிப்பு நிறுவனம் கே வி என் ப்ரொடக்ஷன் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது .வரும் ஜனவரி 26 ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறது கேவிஎன் புரொடக்ஷன்ஸ். அரசியலில் வந்த பிறகு விஜயின் பேச்சியில் ஒரு ஆக்ரோஷம் இருப்பதாகவும் தெரிகிறது.
அதனால் அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்றும் சொல்லப்படுகிறது. அவரின் இந்த அரசியல் வருகை பல அரசியல் தலைவர்களை கதிகலங்க வைத்திருக்கிறது. ஆனால் விஜய் யாரை பற்றியும் எதை பற்றியும் கவலை கொள்வதாக தெரிவதில்லை. இறங்கிட்டோம். அதனால் கண்டிப்பாக பிரச்சினைகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்ற முனைப்பிலேயே விஜய் இருப்பது நன்றாக தெரிகிறது.