’லகஷ்மன் ஸ்ருதி’ ராமன் காலமானார்: அதிர்ச்சியில் இசையுலகம்

Published on: December 25, 2019
---Advertisement---

996383e1adae5819e08ccb7138ed2f7b

லகஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவின் இயக்குனரும், லக்‌ஷ்மனின் சகோதரருமான ராமன் நேற்றிரவு திடீரென காலமானார். அவருக்கு வயது 54. லகஷ்மன் ஸ்ருதி ராமனின் மறைவால் இசையுலகினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

லகஷ்மன் ஸ்ருதி’ இசைக்குழுவின் பெருந்தூணாக இருந்த ராமன் அவர்களின் மறைவு அந்த குழுவிற்கு மிகப்பெரிய இழப்பு என்றும் இந்த இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்றும் கூறப்படுகிறது

லகஷ்மன் ஸ்ருதி’ ராமன் மறைவு செய்தி அறிந்து திரையுலகினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கூறியபோது, ‘மிக இனிய நண்பரும் இசை உலகத்திற்கு உற்ற ஊக்குவிப்பாளருமான லகஷ்மன் ஸ்ருதி “ ராமன்” திடீர் மறைவு எனக்கு பேரதிர்ச்சி. அவரை இழந்து நிற்கும் லக்‌ஷ்மன், மற்றும் அவர் இசைக்குழு, அவர் குடும்பத்தாருக்கு, என் பயனற்ற ஆறுதல்கள்’ என்று கூறியுள்ளார்.

Leave a Comment