இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ… கதறனும் போல இருக்கு – லட்சுமி ராமகிருஷ்ணன்

ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசமானதில் இருந்து அங்கிருந்து வெளியாகும் புகைப்படங்கள், வீடியோக்கள் நெஞ்சை பதற வைக்கும்படியாக இருக்கிறது.  
தாலிபான்களிடம் சிக்கி சிறுமிகளும், பெண்களும் என்ன பாடுபடப் போகிறார்களோ என்பது தான் பலரின் கவலையாக இருக்கிறது.

நடிகையும், இயக்குநரும், சமூக ஆர்வலருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கும் அதே கவலை தான்.

​​​​​ஆப்கானிஸ்தானில் இருக்கும் பெண் பிள்ளைகளின் நிலை என்னவாகும்? இது பற்றி ஐ.நா. ஏதாவது செய்ய முடியுமா?. எதுவும் தெரியவில்லை ஆனால் கவலை, பயம், மன அழுத்தமாக இருக்கிறது. கதறி அழ வேண்டும் போன்று இருக்கிறது #PrayersForAfghanistan என லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பிரபல பாடகரான அத்னன் சாமியோ, தாலிபான்கள் விளையாடி மகிழும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு, உங்களை தோற்கடித்தவர்கள் இவர்கள் தான் என்று கூறியிருக்கிறார்.

 

Published by
adminram