இதுக்கு நீங்க பிக்பாஸுக்கு பாத்ரூம் கழுவ போயிருக்கலாம் லட்சுமி மேனன்!

by adminram |

7492765951110ca9544222474f6f8673

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆன லட்சுமி மேனன் அதன் பிறகு கும்கி, ஜிகர்தண்டா, வேதாளம் என அதிகம் பேசப்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார். கேரளத்து வரவான நடிகை லட்சுமி மேனனுக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.

இதையடுத்து சில வருடம் தமிழ் படங்களில் நடிப்பதில் ஒதுங்கியிருந்த அவர் பின்னர் மாடர்ன் ரோல்களை ஏற்று நடித்திருந்தார். அது அவரது முகபாவனைக்கு செட் ஆகவில்லை. அத்துடன் படவாய்ப்புகளும் குறைய துவங்கியது. இந்நிலையில் சமீப நாட்களாக வித விதமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்ததால் பிக்பாஸில் பங்கேற்க போகிறார் என வதந்திகள் எழுந்தது.

இது குறித்து சமீபத்தில் லட்சுமி மேனன், " நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறவில்லை. அத்துடன் மற்றவர்களின் எச்சி தட்டை கழுவவோ, அடுத்தவர்களின் கழிவறை கைகழுவவோ அங்கு ஒருபோதும் மாட்டேன். முக்கியமாக கேமராவுக்கு முன்னால் சண்டை போட மாட்டேன். எனவே பிக்பாஸ் என்ற குப்பை நிகழ்ச்சியில் செல்ல போகிறேன் என்று இனி யாரும் என்னிடம் கேட்காதீர்கள் என காட்டமாக பதிவிட்டு சர்ச்சை கிளப்பினார்.

a627dac215ac7ec45a6cffed0baff16e

இந்நிலையில் லட்சுமி மேனன் நடிகர் கருணாஸிற்கு ஜோடியாக திண்டுக்கல் சாரதி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாக அதற்கு மீம்ஸ் கிரியேட்டர்ஸ் இதுக்கு இவங்க பாத்ரூம் கழுவ பிக்பாஸுக்கே போயிருக்கலாம் என ட்ரோல் செய்து வருகின்றனர்.

Next Story