தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி படங்களில் நடித்து வரும் ராய் லட்சுமி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி ட்வீட் செய்வதுடன், இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தன் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
விலங்குகள் மீதான தன் அன்பை வெளிப்படுத்த அவர் வெளியிட்ட வீடியோவை பார்த்தவர்கள் ராய் லட்சுமியை விளாசியுள்ளனர். விலங்கியல் பூங்கா ஒன்றில் சிங்கக் குட்டிக்கு பால் கொடுத்திருக்கிறார்.
மேலும் கூண்டில் இருக்கும் விலங்குகளிடம் ராய் லட்சுமி அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த வீடியோ அவரின் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஆனால் சமூக வலைதளவாசிகளோ, ராய் லட்சுமியை விளாசுகிறார்கள்.
அவர்கள் கூறியிருப்பதாவது, இதற்கு பெயர் அன்பு கிடையாது, கொடுமை. சுதந்திரமாக காட்டில் இருக்க வேண்டிய விலங்குகளை கூண்டில் அடைத்து வைப்பது கொடுமை. உங்களுக்கு விலங்குகள் மீது உண்மையான அன்பு இருந்தால் அவற்றை விடுவிக்கவும்.
கார்த்தி நடிப்பில்…
விஜய் தொலைக்காட்சி…
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…