கடைசி நம்பிக்கையும் காலி…. ஒப்பந்த பட்டியலில் இருந்து தோனி நீக்கம் ! கழட்டிவிட்ட பிசிசிஐ !!

பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்து இந்திய முன்னாள் கேப்டன் தோனி விலக்கப்பட்டார்.

பிசிசிஐ மற்றும் இந்திய அணி வீரர்களுக்கான 2020 ஆம் ஆண்டுக்கான ஒப்பந்த பட்டியல் இன்று வெளியானது. இதில் இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி பட்டியலில் இல்லாதது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு ஏ பிரிவில் இருந்த தோனி ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார். கடந்த 2019 ஆம் ஆண்டு நியுசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாடிய தோனி அதன் பின்னர் எந்த ஒரு சர்வதேசப் போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிசிசிஐ யின் இந்த முடிவால் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Published by
adminram