தரமான சம்பவம் காத்திருக்கு!.. நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ டீசர் வீடியோ -

by adminram |

8ea55ccbdd3955b126d29f9e559b06cb

அவள் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் மிலிந்த் ராவ். தற்போது நயன்தாராவை வைத்து ‘நெற்றிக்கண்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை நயனின் காதலர் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார்.

பெண்களை குறி வைத்து கடத்தி சென்று அவர்களை சித்ரவதை செய்யும் ஒரு சைக்கோவை, கண் தெரியாத நயன்தாரா எப்படி பழிவாங்குகிறார் என்பதே கதையாகும்.

இந்நிலையில், நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு நெற்றிக்கண் படத்தின் டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த டீசர் மிரட்டலாக அமைந்துள்ளது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story