More

லாக்டவுனால் கிடைத்த மகிழ்ச்சி- நடிகை ராஷ்மிகா மந்தனா கருத்து!

தென்னிந்தியாவின் வளரும் நடிகையான ராஷ்மிகா மந்தனா லாக்டவுன் நாட்களால் கிடைத்த மகிழ்ச்சி பற்றி பேசியுள்ளார்.

Advertising
Advertising

தெலுங்கு படமான கீதா கோவிந்தம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த ராஷ்மிகா மந்தனா, அதன் பின்னர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் லாக்டவுனால் இரண்டு மாதங்களுக்கு மேலாக வீட்டில் முடங்கியிருக்கும் அவர், இந்த நாட்களில் கிடைத்த மகிழ்ச்சியான அனுபவம் பற்றி பேசியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், ‘என் 18 வயதில் இருந்து வாழ்க்கை ஒரு மாரத்தான் ஓட்டத்தைப் போல இருந்தது. போட்டி முடிந்தது என நினைக்கும் போதெல்லாம், மீண்டும் தொடங்கிவிடும். இதை நான் ஒரு புகாராகக் கூறவில்லை. இத்தனை நாட்கள் நான் வீட்டில் இருந்ததே இல்லை. பள்ளிப்பருவம்

தொடங்கி உயர்கல்வி முடிக்கும் வரை விடுதியில்தான் தங்கியிருந்தேன். இந்த ஊரடங்கில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நான் வீட்டிலேயே இருக்கிறேன். நாங்கள் யாரும் இப்போது வேலையைப் பற்றி பேசுவதே இல்லை. நான் இத்தனை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்வேன் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை.’ எனக் கூறியுள்ளார்.

Published by
adminram

Recent Posts