Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தெரு சண்டை போல் ஆக்கிட்டீங்க… வனிதாவிடம் மன்னிப்பு கேட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்!

வனிதாவின் மறுமணம் குறித்து சொல்வதெல்லாம் உண்மை புகழ் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கடந்த சில திங்களுக்கு முன்னர் “நான் இப்பொழுது தான் இந்த செய்தியை பார்த்தேன். அந்த நபருக்கு ஏற்கனவே கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இன்னும் விவாகரத்து ஆகவில்லை. படிப்பும், புகழ் வெளிச்சம் உள்ளவர் எப்படி இதுபோன்ற ஒரு தவறை செய்ய முடியும் ? அதிர்ச்சியடைந்தேன். வனிதா மற்றும் பீட்டர் பாலின் திருமணம் முடியும் வரை அவர் ஏன் காத்திருந்தார். ஏன் திருமணத்தை நிறுத்தவில்லை ? என்று கேள்வி எழுப்பி இரண்டு தரப்பிலும் உள்ள குற்றத்தை குறித்து ட்விட் போட்டிருந்தார்.

42cdc36b704d4e59b0c8c921cd77938a

வனிதாவின் இந்த பதிலுக்கு ரிப்ளை செய்த லட்சுமி ராமகிருஷ்ணன், “முறைப்படி விவாகரத்து பெறாமல் நடைபெறும் மறுமணங்களைக் குறித்த என் கருத்தை வெளிப்படுத்தினேன். கற்பழிப்பு, சமீபத்திய தந்தை – மகன் மரணம் குறித்து நான் கருத்தை வெளிப்படுத்தும்போது இத்தனை எதிர்வினைகள் பதில் எனக்கு கிடைக்கவில்லை என்றார்.

அதே சமயம் உங்களுடைய தேர்வு குறித்து நான் கேள்வி எழுப்பவில்லை. ஒருவர் சமூக நடைமுறையை, சட்டத்தை மீறும்போது சமூகமும் நானும் அந்த முடிவை தட்டி கேட்கிறோம். சட்டத்தை மீறி விவாகரத்து பெறாமல் நடைபெறும் மறுமணம் என்கிற அந்த முடிவை மட்டுமே கேட்டோம் என்றார். இந்த விவகாரம் தற்ப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மாறி மாறி இப்படி ஒருவருக்கொருவர் கருத்து தெரிவித்த இந்த விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டதையடுத்து தற்ப்போது வனிதாவிடம் லட்சுமி ராமகிருஷ்ணன் மன்னிப்பு கேட்டுள்ளார்.  ” நான் வனிதா விஜயகுமாரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் அப்படி கமெண்ட் செய்திருக்கக் கூடாது. அதை பெரிதாக்கி தெருச் சண்டை போன்று ஆக்கிய மீடியாவுக்கு நன்றி. உங்களை பற்றிய அனைத்து ட்வீட்டுகளையும் நீக்கிவிட்டேன்.

நீங்கள் சொன்னது போன்று என் ஒரிஜினல் கடமையான பாதிக்கப்பட்ட ஏழை குழந்கைளுக்காக குரல் கொடுப்பேன் #JusticeforJayapriya என்று தெரிவித்துள்ளார். இதனை கண்ட இணையவாசிகள் சிலர் ” தப்பே செய்யாமல் நீங்கள் மன்னிப்பு கேட்டதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை” ஏன் இப்படி வனிதாவிடம் போய் மன்னிப்பு கேட்கிறீர்கள்?. நீங்கள் உங்கள் கடமையை தான் செய்தீர்கள். என்றனர். இதற்கு லட்சுமி… போதும் தயவு செய்து இந்த டாப்பிக் இத்தோடு விடுங்க…. நான் எதுவும் பேசுவதாக இல்லை என்று வெறுப்புடன் கூறிவிட்டார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top