வனிதாவின் இந்த பதிலுக்கு ரிப்ளை செய்த லட்சுமி ராமகிருஷ்ணன், “முறைப்படி விவாகரத்து பெறாமல் நடைபெறும் மறுமணங்களைக் குறித்த என் கருத்தை வெளிப்படுத்தினேன். கற்பழிப்பு, சமீபத்திய தந்தை – மகன் மரணம் குறித்து நான் கருத்தை வெளிப்படுத்தும்போது இத்தனை எதிர்வினைகள் பதில் எனக்கு கிடைக்கவில்லை என்றார்.
அதே சமயம் உங்களுடைய தேர்வு குறித்து நான் கேள்வி எழுப்பவில்லை. ஒருவர் சமூக நடைமுறையை, சட்டத்தை மீறும்போது சமூகமும் நானும் அந்த முடிவை தட்டி கேட்கிறோம். சட்டத்தை மீறி விவாகரத்து பெறாமல் நடைபெறும் மறுமணம் என்கிற அந்த முடிவை மட்டுமே கேட்டோம் என்றார். இந்த விவகாரம் தற்ப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மாறி மாறி இப்படி ஒருவருக்கொருவர் கருத்து தெரிவித்த இந்த விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டதையடுத்து தற்ப்போது வனிதாவிடம் லட்சுமி ராமகிருஷ்ணன் மன்னிப்பு கேட்டுள்ளார். ” நான் வனிதா விஜயகுமாரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் அப்படி கமெண்ட் செய்திருக்கக் கூடாது. அதை பெரிதாக்கி தெருச் சண்டை போன்று ஆக்கிய மீடியாவுக்கு நன்றி. உங்களை பற்றிய அனைத்து ட்வீட்டுகளையும் நீக்கிவிட்டேன்.
நீங்கள் சொன்னது போன்று என் ஒரிஜினல் கடமையான பாதிக்கப்பட்ட ஏழை குழந்கைளுக்காக குரல் கொடுப்பேன் #JusticeforJayapriya என்று தெரிவித்துள்ளார். இதனை கண்ட இணையவாசிகள் சிலர் ” தப்பே செய்யாமல் நீங்கள் மன்னிப்பு கேட்டதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை” ஏன் இப்படி வனிதாவிடம் போய் மன்னிப்பு கேட்கிறீர்கள்?. நீங்கள் உங்கள் கடமையை தான் செய்தீர்கள். என்றனர். இதற்கு லட்சுமி… போதும் தயவு செய்து இந்த டாப்பிக் இத்தோடு விடுங்க…. நான் எதுவும் பேசுவதாக இல்லை என்று வெறுப்புடன் கூறிவிட்டார்.
பிரபல காமெடி…
விவாகரத்து வழக்கு…
Simran: தமிழ்…
Suriya 45:…
விடுதலை 2…