
இந்த நிலையில் ஒரே நாளில் லாஸ்லியா நடிக்கும் இரண்டு படங்களின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பது தெரிந்ததே. பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் ’பிரண்ட்ஷிப்’ என்ற படத்திலும் ஆரி ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கும் ஒரு படத்திலும் லாஸ்லியா நாயகியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது
இந்த நிலையில் ஆரி, சிருஷ்டி டாங்கே, லாஸ்லியா நடிக்கும் படத்தில் தற்போது இன்னொரு ’பிக்பாஸ் 3’ நடிகை இணைந்துள்ளார். அவர்தான் அபிராமி வெங்கடாச்சலம். ஏற்கனவே அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்த நடிக்கும் அடுத்த தமிழ்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது

அறிமுக இயக்குனர் ஆல்பர்ட் ராஜா என்பவர் இயக்கும் இந்தப் படத்தை சந்திரா மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது. சஸ்பென்ஸ் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது