’தளபதி 64’ படத்தில் இணைந்த பழம்பெரும் நடிகர்!

1291541fe2b9d20b3da360d63f15f0c7

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் ’தளபதி 64’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியிலும் நடந்து முடிந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகாவில் நடைபெற்று வருகிறது

கடந்த சில நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விஜய் தங்கியிருக்கும் ஹோட்டல் முன்பும் படப்பிடிப்பு நடைபெறும் ஷிமோகா சிறை முன்பும் தினமும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் விஜய்யை சந்திக்க காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது புதியதாக பழம்பெரும் நடிகர் நாசர் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த ’தமிழன்’, ‘ஆதி’, ‘வசீகரா’, ‘குருவி’, ‘போக்கிரி’ உள்பட ஒருசில படங்களில் நடித்திருக்கும் நிலையில் தற்போது மீண்டும் விஜய் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சாந்தனு இணைந்துள்ளார். இதனை சாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Related Articles

Next Story