சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ’தர்பார்’ திரைப்படம் வரும் 9ஆம் தேதி ரிலீசாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் லைக்கா நிறுவனத்தை எதிர்த்து மலேசிய நிறுவனம் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்த படத்திற்கு தடை ஏதும் இல்லை என்பதால் திட்டமிட்டபடி ‘தர்பார்’ 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என கூறப்படுகிறது
இந்த நிலையில் மலேசிய நிறுவனத்தை மட்டுமின்றி ரஜினியையே லைகா நிறுவனம் சுற்றலில் விட்டுள்ள செய்தி தற்போது வெளிவந்து கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
’தர்பார்’ படத்தில் நடிக்க ரஜினியின் சம்பளம் 100 கோடி ரூபாய் என்றும் அதற்கான 12 கோடி ஜிஎஸ்டியையும் லைக்கா நிறுவனமே கட்டவேண்டும் என்பதுதான் ஒப்பந்தமாம். ஆனால் லைகா நிறுவனம் இதுவரை ஜிஎஸ்டியை கட்டவில்லை என்பதால் ரஜினிக்கு நோட்டீஸ் வந்துள்ளதாகவும் இதுகுறித்து ரஜினி தரப்பு லைக்கா நிறுவனத்தின் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிகிறது
ஆனால் லைகா நிர்வாகிகள் ஜிஎஸ்டி கட்டாமல் இழுத்துக் கொண்டே வந்ததால் அதிருப்தி அடைந்த ரஜினி, உடனே இதுகுறித்து லைக்கா நிறுவனத்தின் முக்கிய நபர் ஒருவரிடம் நேரடியாக போனில் பேசியதாகவும் அதன் பின்னரே இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. லைக்கா நிறுவனத்தின் நிர்வாகிகள் ரஜினியையே சுற்றலில் விட்டுள்ளதால் மீண்டும் லைகாவுக்கு ரஜினி படம் செய்வது சந்தேகமே என்று கூறப்படுகிறது
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…